பனிச்சங்குளம் ஏ9 வீதியில் விபத்து - மூவர் பலி!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
பனிச்சங்குளம் ஏ9 வீதியில் விபத்து - மூவர் பலி!

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்குளம் ஏ9 வீதியில் இன்று (15.08) அதிகாலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். 

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் வேன் ஒன்று  மோதியதில்  குறித்த லொறிக்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்த  மற்றுமொரு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இதன்போது லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும், வேனின் முன் இருக்கையில் பயணித்த நபரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.  

மேலும், வேனில் பயணித்த மூன்று பெண்களும், லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

முல்லேரியா புதிய நகரம், வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன்  விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4