சுவிட்சர்லாந்தில் திறனற்ற ஆசிரியர்கள் மீது மாநில கல்வியதிகாரிகள் அழுத்தம்

#Switzerland #Lanka4 #சுவிட்சர்லாந்து #education #கல்விநிலையம் #லங்கா4 #திறமை #Teacher
சுவிட்சர்லாந்தில் திறனற்ற ஆசிரியர்கள் மீது மாநில கல்வியதிகாரிகள் அழுத்தம்

சுவிட்சர்லாந்து சூரிச்சில் ஒரு பாடசாலை ஆசிரியையினது ஒரு வகையான டிப்போள இல்லாமையால் அவருக்கு மேற்கொண்டு கல்வி கற்பிக்கும் அனுமதியை சூரிச் மாநிலம் தடுத்துள்ளது. அதுமட்டுமல்லாது அவ்வாசிரியையினது சம்பளத்திலும் வெட்டு என தெரிவித்து அவரை மேற்கொண்டு தேவையான கல்வியை தொடர கேட்டுக் கொண்டுள்ளது.

 பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையையும் பொருட்படுத்தாது, மேலும் செயற்கை நுண்ணறிவு, பாடசாலை கலகம், சிரமான பிள்ளைகள் என பாடசாலைகள் காணப்படுகையில் இதனை மேற்கொள்வது சரியா என கேள்வி எழும்புகிறது.

 இதனால் கோபமுற்றுள்ள இவரைப் போன்ற ஆசிரியர்கள் தமது வேலை நேரத்தினையும் கவனித்துக்கொண்டு மேற்கொள்ள வேண்டிய திறன்களை விருத்திசெய்ய வேண்டியுள்ளது என்றும் திறமையான ஆசிரியர் பற்றாக்குறை சட்டத்திற்கு விதிவிலக்கல்ல எனவும் தெரிவி்க்கப்பட்டுள்ளது.