ஆடி அமாவாசையன்று நாம் பொதுவாக ஈடுபடக்கூடிய விடயங்கள்

#Holy sprit #spiritual #Day #Lanka4 #ஆன்மீகம் #இன்று #லங்கா4 #fasting
Mugunthan Mugunthan
11 months ago
ஆடி அமாவாசையன்று நாம் பொதுவாக ஈடுபடக்கூடிய விடயங்கள்

முன்னோர்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் ஆடி மாத அமாவாசை நாளாகும். 

ஆடி அமாவாசை நாளில் தான் பித்ரு லோகத்தில் உள்ள நம்முடைய முன்னோர்கள் நமக்கு ஆசிர்வாதம் வழங்குவதற்காக பூமிக்கு புறப்படும் நாளாகும்.

  ஆடி அமாவாசையில் புனித தலங்களுக்கு சென்று, புண்ணிய நதிகளில் புனித நீராட வேண்டும். ஆடி அமாவாசையில் கங்கை போன்ற புண்ணிய நதிகள், கோவில் குளங்களில் நீராடுவது மிகவும் மங்கரமானதாக கருதப்படுகிறது. 

பிறகு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டும். பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நாளில் பித்ரு பூஜை செய்து, பித்ரு தர்ப்பணம் கொடுப்பதால் தோஷங்களில் இருந்து விடுபட உதவும்.

 ஆடி அமாவாசையில் யாகம், ஹோமம் செய்வது சிறப்பானதாகும். இதனால் பாவங்கள், கர்ம வினைகளில் இருந்து விடுபட முடியும். இந்த நாளில் சிவனுக்குரிய சக்தி வாய்ந்த மந்திரங்களை பாராயணம் செய்வது மிகவும் சிறந்ததாகும்.

 இதனால் காலசர்ப்ப தோஷம் நீங்கும். ஆடி மாதத்திற்கு புருஷோத்தம மாதம் என்றும் பெயர் உண்டு. இதனால் மகாவிஷ்ணுவிற்கு உரிய ராமாயணம், பகவத் கீதை ஆகிய புனித நூல்களையும் வாசிப்பது மிகவும் நன்மை தரும்.

 ஆடி அமாவாசை நாளில் ஏழை எளிய மக்களுக்கு, இல்லாதவர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழங்குவது மிகவும் சிறப்பானதாகும். இதனால் பாவங்களில் இருந்து விடுபடுவதுடன், கடவுள் அருளும் கிடைக்கும்.