ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேண தேசிய ஒற்றுமை மிகவும் அவசியம் - சஜித் பிரேமதாச

#SriLanka #Lanka4 #Monk #srilankan politics
Kanimoli
2 years ago
ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேண தேசிய ஒற்றுமை மிகவும் அவசியம் - சஜித் பிரேமதாச

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்றும் நாளையும் ஒரே நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம் என்றும், ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். விழுமியமிக்க சமூகத்துக்கான பிக்குகள் ஆலோசனை பேரவையின் இரண்டாம் கட்டம் இன்று (15) காலி மாவட்டத்தை இலக்காக் கொண்டு காலி நகரசபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேண தேசிய ஒற்றுமை மிகவும் அவசியம் என்றும், நாட்டின் அனைத்து பிரஜைகளும் சமமாக கருதப்பட்டு ஒவ்வொரு சமூகத்திற்கும் சுயமரியாதையுடன் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும், இன்று இவை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 மகா சங்கத்தினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சிறந்த முறையில் பெற்றுக்கொண்டு பாதகமான காரணிகளை நீக்கி சாதகமான காரணிகளுடன் சமய சேவை, சமூக சேவை மற்றும் முற்போக்கு அரசியல் பயணத்தை முன்னெடுக்கும் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 நாட்டிலுள்ள ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் சமய அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும், சமய வழிபாட்டுத் தலங்களுக்கு சமய நிதியமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு சன்மார்க்க சமுதாயத்தை உருவாக்க உதவுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 விகாரைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும், மத வழிபாட்டுத் தலங்களில் சூரிய மின்சக்தித் திட்டத்தை வெறுமனே கூறாமல் யதார்த்தமாக நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக அனைத்து மக்கள் சமூகங்களும் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும், அந்த இலக்கை நோக்கி ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் செயற்படும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4