துலா ராசியினருக்கு கூட்டுத் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
துலா ராசியினருக்கு கூட்டுத் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: முயற்சியை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவீர்கள். அரசு வழி செயல்களில் கவனம் தேவை. பரணி: தள்ளிப்போன முயற்சிகள் நிறைவேறும். முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். கார்த்திகை 1: உங்கள் செயல்களில் குறை கூறியவர்கள் மாற்றம் அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் செயல்களுக்கு சூழ்நிலைகள் சாதகமாகும். நீண்டநாள் முயற்சி நிறைவேறும். ரோகிணி: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். மறைமுகமாக தொல்லை அளித்தவர்கள் விலகுவர். மிருகசீரிடம் 1,2: வழிபாட்டில் மனம் செல்லும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும். திருவாதிரை: வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். புனர்பூசம் 1,2,3: நண்பர்கள் உதவியுடன் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். செயல்கள் லாபமாகும்.

கடகம்

புனர்பூசம் 4: அரசு வழியில் மேற்கொண்ட முயற்சி நன்மையாகும். குழந்தைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பூசம்: சிக்கலை சந்தித்தாலும் உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தினரால் உங்கள் முயற்சி வெற்றியாகும். ஆயில்யம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

சிம்மம்

மகம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பெரியோரின் ஆலோசனை நன்மை தரும். பூரம்: மனக்குழப்பம் வந்து நீங்கும். பயணத்தில் சில சங்கடங்கள் தோன்றும். புதிய முயற்சிகளை ஒத்தி வையுங்கள். உத்திரம் 1: செயல்களில் தடுமாற்றத்தை சந்திப்பீர்கள். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். நண்பர்களின் வழியே நன்மை அதிகரிக்கும். அஸ்தம்: குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். சித்திரை 1,2: நீண்ட நாட்களாக மேற்கொண்டு வந்த முயற்சியில் இன்று உங்களுக்கு சாதகம் உண்டாகும்.

துலாம்

சித்திரை 3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சுவாதி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: அலுவலகத்தில் இருந்த பிரச்னை தீரும். நண்பர்கள் உதவியால் உங்கள் செயல் லாபமாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். தொழிலை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்கள். அனுஷம்: போட்டிகளை சமாளித்து வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வருவாய் அதிகரிக்கும். கேட்டை: உங்கள் முன்னேற்றத்தை தடுக்க முயன்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் மாற்றத்தை சந்திப்பீர்கள்.

தனுசு

மூலம்: மனம் மகிழும்படியான நிலை ஏற்படும். முன்னோர் வழிபாடு நன்மை தரும். பூராடம்: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் விருப்பம் ஒன்று நிறைவேறும். நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். உத்திராடம் 1: எதிர்பாராத நெருக்கடிகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

மகரம்

உத்திராடம் 2,3,4: செயல்களில் நீங்கள் எதிர்பார்த்தவற்றை அடைய முடியாமல் போகும். சில நெருக்கடிகள் தோன்றும். திருவோணம்: பண வரவில் தடைகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து நினைத்ததை அடைவீர்கள். அவிட்டம் 1,2: கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. நண்பர்களால் சில சங்கடங்கள் உண்டாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: தொழில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மனம் மகிழும்படியான நிலை உண்டாகும். சதயம்: ஆரோக்கியம் சீராகும். உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பூரட்டாதி 1,2,3: முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பணியாளர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். உத்திரட்டாதி: நீங்கள் மேற்கொள்ளும் செயல் வெற்றியாகும். எதிர்பார்த்ததை இன்று அடைவீர்கள். ரேவதி: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.