கொழும்பு மற்றம் கம்பஹா மாவட்டங்களுக்கு தடையின்றி நீர் விநியோம் செய்யப்படும்!

#SriLanka #water #Lanka4
Thamilini
2 years ago
கொழும்பு மற்றம் கம்பஹா மாவட்டங்களுக்கு தடையின்றி நீர் விநியோம் செய்யப்படும்!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

களனி ஆற்றின் நீர் மட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அம்பத்தளை பிரதேசத்தில் மணல் மேடு அமைக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர்  அஜித் பெரேரா குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த நாட்களில், இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் குடிநீர் தொடர்பான சிக்கல் நிலைமைகள் பதிவாகி வருகின்றன, இருப்பினும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைப் பற்றி பேசினால், அவர்களுக்கு போதுமான தண்ணீரைப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன.

அம்பத்தளை பிரதேசத்தில் இருந்து களனி ஆறு, நாம் எதிர்நோக்கும் இரண்டு பிரதான பிரச்சினைகளான ஆற்றின் நீர் மட்டம் குறைதல் மற்றும் குடிநீரில் உப்பு கலந்த கடல் நீரை சேர்ப்பது ஆகிய இரண்டு பிரச்சினைகளை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம். 

தற்போதைய வெப்பமான காலநிலையின் கீழ் நுகர்வோர் அதிக அளவு தண்ணீரை உட்கொள்வதால், எதிர்காலத்தில் சில சிக்கல் நிலைமைகள் இருக்கலாம். எனவே, எங்களால் வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4