மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து பாதிப்பு!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து பாதிப்பு!

மரம் முறிந்து விழுந்த காரணத்தினால் மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து இன்று (16.08) பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பலன மற்றும் இஹலகொட்டை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் மரம் முறிந்து விழுந்துள்ளதாக  ரயில்வே பொது முகாமையாளர் எம்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.  

இதன்காரணமாக கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கவுள்ள நான்கு ரயில்கள் மற்றும் கொழும்பிலிருந்து பொல்கஹவெல பகுதிக்கு செல்லும் இரண்டு ரயில்கள் தாமதமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த மரங்களை அகற்றி ரயில் சேவையை வழமைக்கு கொண்டுவர குறித்த பகுதிக்கு குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4