குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் விழா; அனைத்து மக்களையும் பங்கேற்குமாறு அழைப்பு

#SriLanka #Lanka4 #pressmeet
Kanimoli
2 years ago
குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் விழா; அனைத்து மக்களையும் பங்கேற்குமாறு அழைப்பு

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி பொங்கல் விழா அனைத்து மக்களையும் பங்கேற்குமாறு அழைப்பு. முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி, பொங்கல் விழா ஒன்றினை.மேற்கொள்ளவுள்ளதாகவும் அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் எமது உரிமைகளை வென்றெடுக்க அணிதிரளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

images/content-image/1692157616.jpg

 முல்லைத்தீவு ஊடக அமையத்தில் குருந்தூர்மலை ஆதிசிவன்ஐயனார் ஆலய நிர்வாகம் மற்றும் அரசியல் தலைவர்கள் இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி இந்த அழைப்பை விடுத்துள்ளனர் குறித்த ஊடக சந்திப்பில் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பரிபாலன சபை தலைவர் து.விக்னேஸ்வரன் ஆலய நிர்வாக சபை உறுப்பினர் மற்றும் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்

images/content-image/1692157626.jpg

 இந்த விடயமானது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், தொல்லியல் திணைக்களம் சைவவழிபாடுகளை மேற்கொள்தற்கு எந்தத் தடையுமில்லை எனத் தெரிவித்திருந்தது. அதற்கமைய இந்த பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன. எனவே அனைவரும் இந்தப் பொங்கல் விழாவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று அழைப்பு விடுத்துள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4