சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் ரிஷப ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் ரிஷப ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: தடைபட்டிருந்த முயற்சிகள் நிறைவேறும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பரணி: காலையிலேயே நல்ல செய்தி வந்து சேரும். செயல்கள் நீங்கள் நினைத்தபடி நடந்தேறும். கார்த்திகை 1: உறவினர்களிடம் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடும். ரோகிணி: உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வழக்கு சாதகமாகும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். மிருகசீரிடம் 1,2: தாய்வழி உறவினர்கள் ஆதரவுடன் செயலில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நீண்ட நாள் முயற்சி இன்று நடந்தேறும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். திருவாதிரை: அரசியல் வாதிகளின் எண்ணம் நிறைவேறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். புனர்பூசம் 1,2,3: மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்கள். வருமானமும் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: விஐபிகளின் ஆதரவால் விரும்பியதை அடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பூசம்: தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும். வழக்கு சாதகமாகும். பழைய கடன்களை அடைப்பீர்கள். ஆயில்யம்: பேச்சாற்றலால் ஒரு செயலில் வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் புகழ் உயரும்.

சிம்மம்

மகம்: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மைகள் ஏற்படும். நிதிநிலை உயரும். பூரம்: பணியிடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பேற்படும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உத்திரம் 1: மனம் காட்டும் வழியில் இன்று செயல்படுவீர்கள். கவனக்குறைவால் சில சங்கடங்கள் தோன்றும்.

கன்னி

உத்திரம் 2,3,4: திடீரென்று வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அசதியால் அவதிப்படுவீர்கள். அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சித்திரை 1,2: குடும்பத்தினர் ஆசையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு கரையும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் செயல்களில் ஆதாயம் ஏற்படும். நிதிநிலை உயரும். மகிழ்ச்சி கூடும். சுவாதி: லாபகரமான முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். விசாகம் 1,2,3: புதிய வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். 

விருச்சிகம்

விசாகம் 4: தொழிலில் இருந்த தடைகள் விலகும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். அனுஷம்: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். வருவாய் அதிகரிக்கும். கேட்டை: நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு முயற்சியில் லாபம் அடைவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். 

தனுசு

மூலம்: குலதெய்வ அருள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். பூராடம்: தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பயணத்தால் ஆதாயம் காண்பீர்கள். உத்திராடம் 1: பிறரது விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள். 

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறாமல் போகும். செயல்களில் சங்கடம் தோன்றும். திருவோணம்: இன்று புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது நன்மையாகும். அவிட்டம் 1,2: வீண் சச்சரவுகள் உங்களைத் தேடி வரும். நிதானத்தைக் கடைபிடித்து பொறுமையுடன் செயல்படுங்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: நண்பர்களின் ஒத்துழைப்பு காரணமாக உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வழக்கு சாதகமாகும். சதயம்: தம்பதிகளுக்குள் உண்டான பிரச்னைகள் விலகும். அரசு வழியில் ஆதாயம் அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். 

மீனம்

பூரட்டாதி 4: ஆரோக்கியம் சீராகும். வரவு அதிகரிக்கும். பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உத்திரட்டாதி: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர். எதிர்பார்த்த செய்தி வரும். ரேவதி: வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும்.