கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

#SriLanka #Colombo #water #Lanka4
Kanimoli
2 years ago
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

மின்சார சபையின் உயர் அழுத்த மின் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரை நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவலை மாநகர சபை பகுதிகளுக்கும், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகரசபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை மற்றும் இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4