அரசு வழியில் ஆதாயம் காணும் மீன ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அரசு வழியில் ஆதாயம் காணும் மீன ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பரணி: உங்கள் செயலில் உற்சாகம் இருக்கும். பிள்ளைகளுக்காக ஒரு முயற்சியை மேற்கொள்வீர்கள். கார்த்திகை 1: பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: எதிர்பாராத நெருக்கடிகளை சந்தித்தாலும் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ரோகிணி: தாய்வழி உறவினர் ஆதரவுடன் உங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மிருகசீரிடம் 1,2: இன்றைய முயற்சிகள் தள்ளிப் போகும். சொத்து விவகாரத்தில் இழுபறி உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: அரசு வழியில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கமான செயல்கள் வெற்றியாகும். திருவாதிரை: எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும். புனர்பூசம் 1,2,3: உங்கள் ஆற்றல் வெளிப்படும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும்.

கடகம்

புனர்பூசம் 4: குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள். சகோதரர்களால் நன்மை ஏற்படும். பூசம்: வாக்கு வன்மையால் முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். சிலர் புதிய முதலீட்டை மேற்கொள்வீர்கள். ஆயில்யம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் மாற்றம் செய்வீர்கள்.

சிம்மம்

மகம்: செயலில் இழுபறியான நிலை இருக்கும். பிறரை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம். பூரம்: திருப்பு முனையான நாள். வரவேண்டிய பணம் வந்து சேரும். தேவைகள் நிறைவேறும். உத்திரம் 1: பெரியவர்களின் வழிகாட்டுதலால் வெற்றி அடைவீர்கள். தொழில் விருத்தியாகும்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: வீண் செலவுகளால் நெருக்கடி உண்டாகும். சிலர் குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வீர்கள். அஸ்தம்: நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள். எதிர்பாராத செலவு ஏற்படும். சித்திரை 1,2: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும். மகிழ்ச்சி கூடும்.

துலாம்

சித்திரை 3,4: நட்புகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சுவாதி: இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். விசாகம் 1,2,3: பண நெருக்கடி தீரும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரம் விருத்தியாகும். பொருளாதார நெருக்கடியை சமாளித்து லாபம் காண்பீர்கள். அனுஷம்: எதிர்பார்த்த பணம் உங்களைத் தேடி வரும். வழக்கு ஒன்று உங்களுக்கு சாதகமாகும். கேட்டை: வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிர்பாராத வரவு வந்து உங்களை மகிழ்விக்கும்.

தனுசு

மூலம்: எதிர்காலம் கருதி நீங்கள் மேற்கொள்ளும் ஒரு முயற்சி நிறைவேறும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பூராடம்: சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உத்திராடம் 1: குடும்பத்தில் நெருக்கடிகளை சந்தித்தாலும் அதை உங்கள் திறமையால் சமாளிப்பீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். புதிய முயற்சி பலன் தரும். திருவோணம்: தடைபட்ட செயல்கள் நிறைவேறும். குடும்பத்தினர் ஒத்துழைப்பால் மகிழ்ச்சி காண்பீர்கள். அவிட்டம் 1,2: மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் மனம் அலைபாயும். நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது வேறாக இருக்கும். சதயம்: உற்சாகம் கூடும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணம் ஆதாயமாகும். பூரட்டாதி 1,2,3: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சச்சரவு நீங்கும். இளைஞர்களின் எண்ணம் நிறைவேறும்.

மீனம்

பூரட்டாதி 4: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். உத்திரட்டாதி: மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். இழுபறியாக இருந்த செயல் இன்று முடியும். ரேவதி: நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலில் வெற்றி அடைவீர்கள். அரசு வழியில் ஆதாயம் காண்பீர்கள்.