நீரிழிவு நோயினால் கால்களில் ஏற்படும் காயங்களும் சிகிச்சையும்

#Health #Lanka4 #ஆரோக்கியம் #லங்கா4 #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Antoni #Theva #Antoni Thevaraj
Mugunthan Mugunthan
8 months ago
நீரிழிவு நோயினால் கால்களில் ஏற்படும் காயங்களும் சிகிச்சையும்

சர்க்கரை நோயாளிகளின் கால்களில் காயம் ஏற்பட்டு அது ஆறாமல் இருப்பதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். அவர்களில் சிலருக்கு கால்கள் துண்டிக்கப்படும் துரதிர்ஷ்டமும் நிகழ்வது உண்டு.

 நீரிழிவு நோய் ஏன் கால்களை காயப்படுத்துகிறது? அதற்கான காரணங்கள் என்னென்ன?

 நீரிழிவு நியூரோபதி (Diabetic Neuropathy) எனப்படும் ஒரு நிலை குறித்த சில உண்மைகளை இங்கே அலசலாம் வாருங்கள். இது நீரிழிவு நோய் சிக்கலாகி விட்டதன் விளைவாக தூண்டப்பட்ட ஒரு வகை நரம்பு சேதமாகும். சர்க்கரை நோய் உள்ள அனைவருக்கும் இந்த நிலை வராது. 

ஆனால் 50% நீரிழிவு நோயாளிகளுக்கு, நீரிழிவு நியூரோபதி நிலையை அடையும் அபாயம் இருப்பதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. இரத்த குளுக்கோஸின் அதிக அளவு நரம்புகளை காயப்படுத்தலாம். குறிப்பிட்டு சொன்னால், பெரும்பாலும் கால்கள் மற்றும் பாதங்களில் உள்ள நரம்புகளை சேதப்படுத்தும் குணம் இந்த நோய்நிலைக்கு உண்டு.

 இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நோய்நிலையின் முன்னேற்றத்தை மெதுவாக்குவது மட்டுமே நாம் செய்யக்கூடிய ஒரே விஷயம் ஆகும்.

 உடல் பயிற்சிகள் மற்றும் முறையான உணவுகளை எடுப்பது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்துவது மூலம் இதனை செய்யலாம்.

 இரத்த குளுக்கோஸ் அளவை உணவுக்கு முன் 80 mg/dl மற்றும் 130 mg/dl க்கு இடையில் வைத்திருப்பது மற்றும் உணவுக்கு இரண்டு மணி நேரம் கழித்து 180 mg/dl க்கும் குறைவாக வைத்திருப்பது நீரிழிவு நியூரோபதி நோய்நிலை வளர்ச்சியைக் குறைக்க பரிந்துரைக்கப்படும் இரத்த குளுக்கோஸ் அளவுகள் ஆகும்.

 சிகிச்சையின் இணையான இலக்குகளாக வலியை நிர்வகித்தல் மற்றும் அதனால் ஏற்படும் சிக்கல்களை திறம்பட நிர்வகித்தல் ஆகிய இரண்டு விஷயங்களை கூறலாம்.

 நரம்புகளை அமைதிப்படுத்தக்கூடிய மருந்துகளால் வலி நிர்வகிக்கப்படுகிறது. உறுப்புகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன என்ற விஷயத்தை ஆராய்ந்து அதற்கே ஏற்ப உறுப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் நிர்வகிக்கப்படுகின்றன.

 எனவே செரிமான பிரச்சனைகள், சிறுநீர் பாதை பிரச்சனைகள், பாலியல் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு அதற்கென தனியான குறிப்பிட்ட சிகிச்சையை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றன.

 பொதுவாகச் சொல்லவேண்டும் என்றால், நீரிழிவு நோயை திறம்பட நிர்வகித்து, அது நீரிழிவு நியூரோபதி நோய்நிலையை உண்டாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும்.

 பதிவில் முன்பே கூறியது போல், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சிறந்த வழி வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதேயாகும். நோயாளிக்கு நீரிழிவு நோய் இருக்கும்போது என்ன உணவாக உட்கொள்ளப்படுகிறது என்பது மிகவும் முக்கியமானது.

 பொதுவாக வெள்ளை ரொட்டி, பேஸ்ட்ரி பொருட்கள், இனிப்புகள், கேக்குகள் போன்ற எளிய கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், ஜங்க் உணவுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். 

சிறுதானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளின் வடிவத்தில் கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதை ஊக்குவிக்க வேண்டும்.

 இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள், மருந்து எடுத்துக் கொண்டாலும், LCHF உணவு அல்லது வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை (Metabolic surgery) போன்ற பிற விருப்பங்களை முயற்சி செய்யலாம்.

https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL

தகவல் மற்றும் ஆலோசனை

images/content-image/1692345587.jpg