சென்னை விமான நிலையத்தில் கழிவறையில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் வழியிலுள்ள கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியாளர்கள். அப்போது கழிவறையில் மர்ம பார்சல் ஒன்று உரிமை கோரப்படாமல் கிடந்தது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிலாளர் படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், அந்த பார்சலில் வெடிகுண்டு இருக்கா? சந்தேகத்தின் பேரில் மோப்ப நாயுடன் வந்து தேடினர். ஆனால் அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை.
பின்னர் பார்சலை பிரித்தனர். அதில் தங்க பசை இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்கள் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த பார்சலில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கம் இருந்தது. வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த கடத்தல்காரர், சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதை பார்த்ததும், கழிவறையில் வீசியிருக்கலாம் என தெரிகிறது.