4 ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பிரச்சனைகள் நீங்கும், அதிலும் கன்னி ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
4 ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பிரச்சனைகள் நீங்கும், அதிலும் கன்னி ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : தடைகளைக் கடந்து நினைத்ததை சாதிப்பீர். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். பரணி : வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். குடும்ப பெரியவர்களின் உடல் நிலை சீராகும். கார்த்திகை 1 : குடும்பத்தினரின் தேவையறிந்து அதை நிறைவேற்றுவீர். புதிய முயற்சி எதுவும் இன்று வேண்டாம்

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : குழந்தைகளின் வளர்ச்சி உங்களுக்குப் பெருமையை உண்டாக்கும். எதிர்பார்த்த வரவு உண்டு. ரோகிணி : பழைய செயல் ஒன்றில் நன்மை அடைவீர். வெளிவட்டத்தில் குடும்பத்தினரின் பாராட்டிற்கு ஆளாவீர். மிருகசீரிடம் 1,2 : மற்றவர்களின் பலம், பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி காண்பீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். அரசு வழியில் முன்னேற்றம் காண்பீர்கள். திருவாதிரை : வழக்கமான செயல்களை தவிர்த்து புதிய முயற்சி எதுவும் இன்று வேண்டாம். புனர்பூசம் 1,2,3 : வேலை செய்யும் இடத்தில் பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும்.

கடகம்

புனர்பூசம் 4 : செயலில் கூடுதல் கவனம் செல்லும். தொழிலில் இருந்த தடை விலகும். பொருளாதார நிலை உயரும். பூசம் : சிந்தித்து செயல்பட்டு நீங்கள் ஈடுபடும் முயற்சியில் வெற்றி காண்பீர். பயணத்தினால் ஆதாயம் உண்டு. ஆயில்யம் : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சீராகும்.

சிம்மம்:

மகம் : வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர். எதிர்பார்த்த பணம் வரும். பூரம் : தொழிலில் உண்டான போட்டியை சரி செய்வீர். உங்கள் முயற்சி ஆதாயத்தை ஏற்படுத்தும். நிதிநிலை உயரும். உத்திரம் 1 : ஆரோக்கியம் சீராகும். செயலில் வேகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் பிரச்னை முடிவிற்கு வரும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : பணி புரியும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். அஸ்தம் : முயற்சியில் இருந்த தடை விலகும். குல தெய்வ அருளால் எண்ணம் நிறைவேறும். சித்திரை 1,2 : தொழிலில் உண்டான பிரச்னை தீரும். உங்கள் முயற்சி ஒன்று நிறைவேறும். நிதிநிலை உயரும்.

துலாம்

சித்திரை 3,4 : திடீர் செலவு உண்டாகி பணத்தேவை அதிகரிக்கும். கடன் கொடுத்தவர் நெருக்கடிக்கு ஆளாவீர். சுவாதி : மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும். விசாகம் 1,2,3: நண்பருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

விருச்சிகம்

விசாகம் 4 : இழுபறியாக இருந்த செயல் இன்று நிறைவேறும். வராமல் இருந்த பணம் உங்களைத் தேடி வரும். அனுஷம் : பிரபலங்கள் துணையுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். சிக்கல் தீரும். கேட்டை : நீங்கள் விரும்பியதை இன்று அடைவீர். உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். எதிர்ப்பு விலகும்.

தனுசு

மூலம் : தொழிலில் உண்டான நஷ்டத்திற்கு தீர்வு காண்பீர். உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை ஏற்படுத்தும். பூராடம் : வேலைத்தேடி வந்தவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். உத்திராடம் 1 : பணிபுரியும் இடத்தில் ஒரு சிலருக்கு மாற்றம் நிகழும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

மகரம்:

உத்திராடம் 2,3,4 : தடைகளை விலக்கி உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். திருவோணம் : திட்டமிட்டபடி செயல்படுவீர். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். அவிட்டம் 1,2 : வியாபாரத்தில் உண்டான சங்கடம் விலகும். உறவினர் ஒருவர் உதவியால் எண்ணம் பலிக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். குழப்பம் அதிகரிக்கும். சதயம் : உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் சில செயலில் ஈடுபடாதீர். பயணத்தில் கூடுதல் கவனம் தேவை. பூரட்டாதி 1,2,3 : குடும்பத்தில் தம்பதிகளுக்குள் குழப்பம் அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் ஆரம்பிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4 : தடைபட்டிருந்த முயற்சி ஒன்று நண்பர்கள் உதவியுடன் இன்று நடந்தேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்திரட்டாதி : உங்கள் மனம் மகிழும்படியான சம்பவம் ஒன்று நடைபெறும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ரேவதி : குடும்பத்தில் உண்டான பிரச்னை தீரும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.