குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வை குழப்பிய பிக்கு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

#SriLanka #Police #Mullaitivu
Mayoorikka
2 years ago
குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வை குழப்பிய  பிக்கு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் ஏற்பாடுசெய்யப்பட்ட பொங்கல் நிகழ்வை குழப்பிய பௌத்த பிக்கு மீது நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில், வழிபாட்டின்போது ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து, வன்முறையில் ஈடுபட்ட குருந்தூர்மலை விகாரையின் விகாராதிபதி என தன்னை கூறிக்கொள்ளும் கல்கமுவ சாந்தபோதி தேரருக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

 இதேவேளை மதவழிபாட்டு சுதந்திரத்தை மறுத்து பொங்கல் வழிபாட்டில் பொங்கல் நேர்த்திக் கடனை செய்யவிடாது தடுத்த தொல்லியல் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கையெடுக்குமாறு முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4