சுவிட்சர்லாந்தில் ஒருவர் தனது பிள்ளையை வளர்த்தெடுக்க அவசியப்படுபவை
ஒரு பிள்ளையை வளர்த்தெடுப்பது முக்கிய கடமையாகும். அதிகமான பெற்றோர் அடிக்கடி கேட்கும் கேள்வி அவர்கள் பிள்ளைகளுக்கு எது நல்லது என்பதே. இது பற்றி மற்றைய பெற்றோருடன் கருத்துப்பரிமாறுவது மிகவும் பிரயோசனமானது. அதைவிட பல விதமான ஆலோசனை நிலையங்களும் உதவிசெய்யும்.
சந்திக்குமிடங்கள்
தாய் தந்தையருக்கு மற்றைய பெற்றோருடன் கருத்துப் பரிமாறுதல் அல்லது விரும்பினால் பிள்ளையுடன் சேர்ந்து செயற்பாடுகளில் பங்குபற்றுதல் போன்ற பரந்த வசதிகள் உள்ளன.
சுவிஸ் மற்றும் வெளிநாட்டுப் பெற்றோர் சேர்ந்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக சில விசேட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சிறு குழந்தைகளுக்கு பல சலுகைகள் உள்ளன, அதில் பெற்றோர்களும் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளலாம்.
பெற்றோர் - பிள்ளைகள் உடற்பயிற்சி (MuKi-/VaKi-/ElKi-Turnen) இங்கு விளையாட்டு அதனால் மகிழ்ச்சி பெற்றோருக்கும் சிறு குழந்தைகளுக்குமான உடலசைவுகள் என்பன நடக்கும்.
இந்த உடற்பயிற்சியை அதிகமாக கிராமசபைகள் நடத்தும். குடும்பமையம் - இங்கு பெற்றோர் குழந்தைகளுக்கான பல விதமான நிகழ்ச்சிகள் நடைபெறும். நூலகங்கள் சிறிய மற்றும் வளர்ந்த பிள்ளைகளுக்காகவும் பெற்றோருக்காகவும் உரிய வசதிகளை செய்திருக்கின்றன.
வதியும் கிராமசபைகளில் அந்தப் பிரதேசத்திற்குரிய பலவேறு வசதிகளைப்பற்றி அறியலாம். அது எப்போதும் பிரயோசனப்படும்.
பெற்றோர் கல்வி
பேர்ண் மாநிலத்தில் பெற்றோர் பலவிதமான வகுப்புகளுக்குப் போகலாம். வெளிநாட்டவர்களின் விசேடமான தேவைகளுக்காகவும் வகுப்புகள் உண்டு. உதாரணத்திற்கு சுவிஸ் கல்வித்திட்டம் பற்றிய வகுப்பும் உண்டு. ஒரு சில வகுப்புகள் வெளிநாட்டு மொழிகளிலும் நடக்கிறது.
பாடசாலை அல்லது வாழிட கிராமசபையில் உள்ள சலுகைகள் பற்றி மாநில குடும்ப இணைய பக்கத்தில் நீங்கள் மேலும் அறியலாம். அத்துடன் பிரசவம் குறித்த தலைப்பில் ஆயத்தப்படுத்தல் மற்றும் உதவுதல் போன்றவற்றிற்கு வித்தியாசமான சலுகைகள் உள்ளன.
வளர்ப்பு பற்றிய ஆலோசனை
பிள்ளை வளர்ப்புப் பற்றிய ஆலோசனை தேவைப்படுபவர்கள் பல விதமான ஆலோசனை நிலையங்களை நாடலாம். எல்லாப் பிரதேசங்களிலும் வளர்ப்பு பற்றிய ஆலோசனை நிலையங்கள் உள்ளன.
அவை மாநிலத்தின் வேண்டுகோளின்படி பிள்ளைகள் உள்ள குடும்பத்திற்கு இலவச ஆலோசனை வழங்குகின்றன. இதைவிட தாய் - தந்தை ஆலோசனை பல கிராமசபைகளிலும் உதவுவதுடன், பால் குடிக் குழந்தைகளின் பராமரிப்பு பற்றிய விடயங்களுக்கும் உதவும். பெற்றோர் அவசரத்திற்கு ஆலோசனை பெற தொலைபேசி மூலம் அல்லது ஈ மெயில் (தொ.பேசி 0848 35 45 55 (சாதாரண கட்டணம்)www.elternnotruf.ch).