அசோகா அல்வா ஈஸியாக வீட்டிலே இப்படி செய்து பாருங்க!

#India #Cooking #Food #2023 #Tamilnews #Sweets #How_to_make
Mani
2 years ago
அசோகா அல்வா ஈஸியாக வீட்டிலே இப்படி செய்து பாருங்க!

தேவையான பொருட்கள்:

  • 100 கிராம் பாசிப்பருப்பு
  • 200 கிராம் சீனி
  • 2 மேஜைக்கரண்டி கோதுமை மாவு
  • 50 கிராம் நெய்
  • 10 முந்திரிப் பருப்பு
  • கேசரி கலர் சிறிது

செய்முறை:

  • அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மூழகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பருப்பு நன்றாக வெந்ததும் நன்கு மசித்து மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  • அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானவுடன் கோதுமை மாவை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பிறகு அதனுடன் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, பாதி அளவு நெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
  • அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் பொழுது சீனி, கேசரி பவுடர் பவுடர் இரண்டையும் சேர்த்து கை விடாமல் கிளறவும்.
  • சீனி நன்கு கரைந்து பருப்போடு சேர்ந்து கெட்டியாகும் வரை கை விடாமல் கிளறவும்.பிறகு மீதமுள்ள நெய், வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு இரண்டையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான அசோகா அல்வா ரெடி.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4