ரிஷப ராசியினருக்கு சொத்து வாங்கும் முயற்சி தள்ளிப்போகும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
ரிஷப ராசியினருக்கு சொத்து வாங்கும் முயற்சி தள்ளிப்போகும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : நினைத்ததை நடத்தி முடிப்பீர். புதிய முயற்சி வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். பரணி : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபத்தை உண்டாக்கும். வாய்ப்பு உங்களைத் தேடி வரும். கார்த்திகை 1 : நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : சொத்து வாங்கும் முயற்சி தள்ளிப்போகும். பெற்றோரின் ஆதரவால் நிதிநிலை உயரும். ரோகிணி : குடும்ப நலனில் அக்கறை கொள்வீர். பிள்ளைகள் வழியே ஆதாயம் காண்பீர். வருமானம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2 : நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : வியாபாரத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி லாபத்தை உண்டாக்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும். திருவாதிரை : உங்கள் முயற்சியின் வழியே பலன் அடைவீர். புதிய இடம் வாங்கும் செயல் வெற்றி பெறும். புனர்பூசம் 1,2,3: செயல்களில் லாபம் காண்பதற்காக அனைவரையும் அரவணைத்துச் செல்வீர். சங்கடம் விலகும்.

கடகம்

புனர்பூசம் 4 : துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். ஆதாயம் அதிகரிக்கும். பூசம் : பொது நல முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர். முடிவு உங்களுக்கு சாதகமாகும். மற்றவர்கள் பாராட்டுவார்கள். ஆயில்யம் : சகோதரர் உதவியுடன் ஒரு செயலில் ஈடுபட்டு வெற்றி காண்பீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

சிம்மம்

மகம் : கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். பூரம் : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். வருமானத்திற்கான எடுத்த முயற்சி லாபமாகும். உத்திரம் 1 : வியாபாரத்தில் உங்கள் முயற்சி லாபமாகும். சொத்து வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : வருமானம் அதிகரிக்க புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர். திட்டமிட்ட செயல்பட லாபம் உண்டாகும். அஸ்தம் : இழுபறியாக இருந்த உங்கள் செயல் பூர்த்தியாகும். நினைத்ததை இன்று அடைவீர். சித்திரை 1,2 : தடைபட்டிருந்த பணம் வரும். தொழிலை விரிவு செய்வீர். மற்றவரை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்

சித்திரை 3,4 : வெளியூர் பயணமும் அலைச்சலும் ஏற்படும். முயற்சி தாமதமாகும். வரவு இழுபறியாகும். சுவாதி : விரும்பிய செயலில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர். விசாகம் 1,2,3 : குடும்ப வகையில் திடீர் செலவு தோன்றும். பொருளாதார நெருக்கடி ஏற்படும். போராடி சமாளிப்பீர்.

விருச்சிகம்

விசாகம் 4 : எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர். புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். அனுஷம் : புதிய தொழில் தொடங்குபவருக்கு குடும்பத்தினர் ஆதரவு உண்டாகும். குல தெய்வக்கோயிலுக்கு செல்வீர். கேட்டை : தொழிலில் இருந்து வந்த தடை விலகும். பண புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

தனுசு

மூலம் : வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். உங்கள் முயற்சி பலிதமாகும். பூராடம் : வழக்கமான வருமானம் தடையின்றி வரும். கவனமாக செயல் படுவதால் நன்மை அடைவீர். உத்திராடம் 1 : வியாபாரி தங்கள் தொழிலில் மட்டும் கவனம் செலுத்தவும். இல்லையெனில் சங்கடம் உண்டாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். திருவோணம் : எதிலும் பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. தந்தை வழி உறவுகளால் ஆதாயம் காண்பீர்கள். அவிட்டம் 1,2 : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4 : வருமானத்தில் இருந்து வந்த தடை விலகும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். சதயம் : வெளியூர் பயணங்களில் விழிப்புணர்வு தேவை. உங்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும். பூரட்டாதி 1,2,3 : அடுத்தவர் பிரச்னையில் இன்று தலையிட வேண்டாம். யாருக்கும் ஜாமீனுக்கு நிற்க வேண்டாம்.

மீனம்

பூரட்டாதி 4 : நீங்கள் எதிர்பார்த்தவற்றை இன்று அடைவீர். வாழ்க்கைத் துணையின் எண்ணத்தை நிறைவேற்றுவீர். உத்திரட்டாதி : விலகிச் சென்றவர் உங்களோடு இன்று மீண்டும் வருவர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். ரேவதி : உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும்.