2 மாத காலத்துக்குள் சுவிஸில் 10 கோவில்களில் ஒரே குழு திருட்டு : அதிர்ச்சி செய்தி!

#swissnews #Lanka4 #Swiss
Dhushanthini K
1 year ago
2 மாத காலத்துக்குள் சுவிஸில் 10 கோவில்களில் ஒரே குழு திருட்டு : அதிர்ச்சி செய்தி!

அண்மைக்காலமாக உலகம் கொரோனாவாலும் உலக வரம்பில் ஒவ்வொரு நாடுகளுக்கிடையில் மூண்ட தேவையற்ற போராலும் மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டு உண்ண உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். 

வேலையில்லா பிரச்சினையும் நோய்களும் மனித குலத்தை சின்னாபின்னமாக்கும் இவ்வேளையில் தமது வாழ்வாதாரத்தை உயர்த்த சிலர் எடுத்துக்கொண்ட வழியே களவு ஆகும்.  இதை சிலர் வறுமைக்காக செய்தாலும் அதுவே பழக்கத்தில் ஒரு தொழிலாக மாறிவிட்டது.  

உலக நாடுகளில் எங்கெங்கு களவு செய்தால் அதிக பொருளை ஈட்டவும் இலகுவாக களவு செய்யவும் முடியுமோ அங்கே கள்ளன் தன் கை வரிசையை காட்டுகிறான். அந்த  வகையில் இவர்களுக்கு தொழில் நுட்பங்களும் உதவுகின்றன. 

 சுவிஸ் நாட்டில் இக்களவு குற்றங்கள்  பல காலங்களாக இருப்பதும் அவர்கள் தண்டிக்கப்படுவதும் நாம் அறிந்த விடயம்தான். இருப்பினும் இவர்கள் தற்பொழுது தமிழர் மீது கண் வைத்திருப்பதை அதிகமாக காணவும், அறியவும் முடிகிறது. 

அதுவும் இவர்கள் தமிழ் கோவில்களை குறிவைத்துள்ளனர்.  இது பெரிய தலை வலியாக இருக்கிறது. கடந்த 2 மாதத்துக்குள் பேர்ன், சூரிச், லுகானோ, கூர், லவுசான் போன்ற இடங்களில் 10 கோவில்களில் நவீன முறையில் கோவில் உண்டியல், அம்மனிற்கு போடப்படும் பொட்டு தாலிகள், வேறு விலை மதிப்பான பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதனை பல கோவில்களின் பொறுப்புவாய்ந்தவர்கள்  மூடி மறைத்துவிட்டார்கள். 

இத்திருட்டை மூவர் கொண்ட ஒரு குழுவே செய்துள்ளதாகவும், இவர்கள் பிரான்ஸ் நாட்டு இலக்கத்தகட்டுடன் உள்ள கார் மூலம் திருட வந்ததாகவும் cctv கமெராவில் கண்டுகொள்ளப்பட்டுள்ளது.  இதற்கு சில தமிழ் மக்களுக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுறது. 

 திருட்டுக் கொடுத்த கோவில்களின் நிர்வாகம் வெளியே கூறாமல் இருப்பதும் கவலை கொள்ளவேண்டிய விஷயமாக உள்ளது.  இது மட்டுமல்லாமல் திருவிழா காலங்களில் நகை மற்றும் பணம் களவு போவதும் அறியகூடியதாக உள்ளது. 

தமிழ் மக்களே இக்கால சூழலில் உங்கள் நகை. பொருள்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்களென lanka4 ஊடகம் கேட்டுக்கொள்கின்றது