விக்னேஷ் சிவனின் சாபத்தால் முடிவுக்கு வந்த அஜித்தின் விடாமுயற்சி படம்
அஜித் துணிவு படத்தை நிறைவு செய்வதற்கு முன்பே உறுதியான படம் தான் ஏகே 62. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்காவுடன் அஜித் கூட்டணி போட இருந்தார். மேலும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் தயாரிப்பு தரப்பு மற்றும் விக்னேஷ் சிவன் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விக்னேஷ் சிவன் இந்த படத்திலிருந்து தூக்கப்பட்டார். ஆனால் கண்டிப்பாக வேறு ஒரு படத்தில் அஜித்துடன் இணைவேன் என்று விக்னேஷ் சிவன் அவ்வப்போது பேட்டியில் கூறி வருகிறார்.
மேலும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ்திருமேனி ஏகே 62 படத்தை இயக்க ஒப்பந்தமானார். அதன்படி அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி விடாமுயற்சி என்ற டைட்டிலுடன் படக்குழு அதிகார அறிவிப்பை வெளியிட்டது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களான பிறகும் இப்போது வரை படப்பிடிப்பு தொடங்கவில்லை. ஏதோ சில காரணங்களினால் ஒவ்வொரு முறையும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
இப்போது ஆரம்பிக்கும் முன்பே விடாமுயற்சி படத்தை அஜித் கைவிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நம்பகத் தகுந்த ஊடகங்களில் இந்த செய்தி சொல்லப்பட்டு வருகிறது. மேலும் இதற்கான காரணம் என்ன என்று தற்போது வரை தெரியவில்லை. ஆனால் விரைவில் லைக்கா நிறுவனம் விடாமுயற்சி கைவிடப்பட உள்ள அறிவிப்பை வெளியிட இருக்கிறது. இதை அறிந்த அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஏனென்றால் விரைவில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் இனிமேல் வேறு ஒரு படத்தில் அஜித் எப்போது ஒப்பந்தமாகி படப்பிடிப்பு தொடங்குவது என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
விடாமுயற்சி தொடங்குவதற்கு முன்பே இவ்வாறு தடைபட்டு நின்று போவதற்கு விக்னேஷ் சிவன் விட்ட சாபம் தான் காரணம் போல என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஏனென்றால் அறிவிப்பு வெளியான பிறகு ஒரு இயக்குனர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டால் அவரது கேரியர் கேள்விக்குறி தான். இப்படி இக்கட்டான சூழ்நிலையை விக்னேஷ் சிவன் சந்தித்ததால் அவர் கொடுத்த சாபம் காரணமாக கூட இந்த படம் நின்று போய் இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.