லியோ இசை வெளியீட்டு விழா எப்போது? எங்கே? என தகவல் வெளியீடு!

#India #Cinema #TamilCinema #2023 #Vijay #Movie
Mani
2 years ago
லியோ இசை வெளியீட்டு விழா எப்போது? எங்கே? என தகவல் வெளியீடு!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை அக்டோபர் 19ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே புரோமோஷன் பணிகளையும் தொடங்க உள்ளனர். முதல் கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அதன் பின் சென்னையில் நடத்தப்படும் என்றும் மதுரையில் நடத்தப்படும் என்றும் பல்வேறு செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி மலேசியாவில் ’லியோ’ இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக தெரிகிறது.

மேலும் இந்த விழா அக்டோபர் ஐந்தாம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. முதல் முறையாக தளபதி விஜய் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழகத்தை தாண்டி வெளிநாட்டில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் கூறும் குட்டி கதையை கேட்க அவர் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4