கடல்வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல லட்சம் பெறுமதியான பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரை வழியாக பீடி இலைகள் கடத்தப்படவிருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.
தூத்துக்குடி கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், தாளமுத்துநகர்-ராஜபாளையம் கடற்கரை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த சிறியரக லொறியை பொலிஸார் சோதனையிட்டனர்.
இதன்போது ரூபா 10 இலட்சம் பெறுமதியான 32 மூட்டைகளில் சுமார் 1000 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், குறித்த லொறியில் பயணித்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் தூத்துக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைக்கு தூத்துக்குடி கடலோர பகுதி வழியாக பீடி இலைகள், மஞ்சள் மற்றும் டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.