பெருந்தோட்ட மக்கள் மீதான அடக்குமுறைகள் குறித்து மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார் சஜித்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
பெருந்தோட்ட மக்கள் மீதான அடக்குமுறைகள் குறித்து மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார் சஜித்!

பெருந்தோட்ட மக்கள், உழைக்கும் மக்கள் மீதான கொடூரமான அடக்குமுறைகளை எதிர்க்கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22.08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 மாத்தளை எல்கடுவ ரத்வத்த கீழ் பகுதியில் வசித்து வந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் தோட்ட உதவி முகாமையாளரால் கடந்த 19 ஆம் திகதி வெளியேற்றப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே  அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்காலிகமாக அவர்களுக்கு தங்க அனுமதிக்கப்பட்டிருந்த குடியிருப்புகளும் நாசமாக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்திற்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்திற்கு அமைச்சரே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

அமைச்சர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று செயற்பட்டும் பயனில்லை எனக் கூறிய அவர்,  நாட்டில் உள்ள பெருந்தோட்ட சமூகத்தை அரசாங்கம் எவ்வாறு நடத்துகிறது என்பதை இந்த சம்பவம் எடுத்துக் காட்டுவதாகவும்,தோட்ட மக்களுக்கு நீதி வழங்குவதில் அரசாங்கம் வெற்றிகாணவில்லை என்றும் கூறினார். 

பெருந்தோட்ட சமூகத்தினரின் கடின உழைப்பினால் நாட்டுக்கு டொலர்கள் கிடைப்பதாகவும், அம்மக்களின் சுகாதார மற்றும் கல்விப் பிரச்சினைகள் பல இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், தோட்ட மக்களின் வாக்குகளைப் பெறும்போது அரசாங்க அமைச்சர்கள் முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் மலையக பெருந்தோட்ட சமூகம் அனைத்து தரப்பிலிருந்தும் குறைந்த கரிசனைகளே பெற்று வருவதாகவும் பெருந்தோட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத காரணத்தினாலேயே மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு இதை கொண்டு வந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4