சிறுவாபுரி முருகன் கோவிலில் சிறப்பாக வருஷாபிஷேக விழா

#India #Temple #spiritual #2023 #Tamilnews
Mani
9 months ago
சிறுவாபுரி முருகன் கோவிலில் சிறப்பாக வருஷாபிஷேக விழா

சோழவரம் ஒன்றியம், ஆரணியை அடுத்த சிறுவாபுரி கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.மேலும், கோவிலில் நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது.

நேற்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து, முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் கலசங்கள் சாத்தப்பட்டு மகாபூர்ணாகுதி நடைபெற்றது. இதன் பின்னர், புனித நீர் அடங்கிய கலசங்களை ஊர்வலமாக கொண்டு வந்து மூலவருக்கு அபிஷேகம் செய்தனர்.