கடக ராசியினருக்கு அலைச்சல் அதிகரித்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
கடக ராசியினருக்கு அலைச்சல் அதிகரித்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி : நீங்கள் ஈடுபடும் வியாபாரத்தில் லாப நிலை உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரணி : புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றி காண்பீர். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். கார்த்திகை 1 : வியாபாரத்தில் இருந்து வந்த நெருக்கடி விலகும். அடுத்தவரை நம்பி எந்த முயற்சியிலும் இறங்காதீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ரோகிணி : விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர். நண்பர்கள் வழியே நன்மை அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2 : அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : பிள்ளைகள் வழியில் நன்மை அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். திருவாதிரை : வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர். வருமானத்தில் இருந்து வந்த தடை அகலும். புனர்பூசம் 1,2,3 : மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர். புதிய முயற்சி ஒன்று லாபமாகும். நன்மையான நாள்.

கடகம்

புனர்பூசம் 4 : அலைச்சல் அதிகரித்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். பூசம் : புதிய முயற்சி அனுகூலமாகும். விலகிச்சென்ற உறவினர் உங்களைத்தேடி வருவர். சங்கடம் விலகும். ஆயில்யம் : வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைக் காண்பீர். ஆடம்பர செலவு செய்து மகிழ்வீர்.

சிம்மம்:

மகம் : உங்களுக்கு விருப்பமான ஒருவரை சந்திப்பீர். நினைத்ததை சாதிப்பீர். இடம் வாங்கும் முயற்சி நிறைவேறும். பூரம் : வியாபாரத்தின் நுணுக்கங்களை தெரிந்து கொண்டு செயல்படுவீர். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். உத்திரம் 1 : உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்டநாள் முயற்சி முன்னேற்றம் அடையும். 

கன்னி

உத்திரம் 2,3,4 : சொத்துப் பிரச்னை சாதகமாகும். நீங்கள் ஈடுபடும் செயல் லாபமாகும்.பண வரவு திருப்தி தரும். அஸ்தம் : உங்கள் சுயஆற்றல் இன்று வெளிப்படும். துணிச்சலாக செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர். சித்திரை 1,2 : எதிரிகளால் உண்டான நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். 

துலாம்

சித்திரை 3,4 : கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகளை தீரும். குழப்பமில்லாமல் செயல்பட நன்மை அதிகரிக்கும். சுவாதி : கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை உயரும். விசாகம் 1,2,3 : நீங்கள் எதிர்பார்த்த உதவி வரும். உறவினர் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். 

விருச்சிகம்

விசாகம் 4 : மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர். அனுஷம் : ஒரு சிலர் உங்களைக் குறை சொல்வர். அமைதி காப்பதால் நன்மை உண்டு. வழக்கு இழுபறியாகும். கேட்டை : குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர். விரும்பிய பொருட்களை வாங்குவீர். செலவு அதிகரிக்கும். 

தனுசு

மூலம் : வெளியூர் பயணம் மேற்கொள்வீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் ஆதாயம் அதிகரிக்கும். பூராடம் : எதிர்கால நலனை ஒட்டி ஒரு முயற்சி மேற்கொள்வீர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்திராடம் 1 : கேளிக்கை, சந்தோஷம் என்று செலவு செய்வீர். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். மகிழ்ச்சி உண்டாகும். 

மகரம்

உத்திராடம் 2,3,4 : நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவர் இன்று உங்களைத் தேடி வருவர். திருவோணம் : உங்கள் செயல்களை மற்றவர் பாராட்டுவர். புதிய பொறுப்பு உங்களுக்கு வரும். வருமானத் தடை நீங்கும். அவிட்டம் 1,2 : வியாபாரத்தை விருத்தி செய்ய முயற்சி மேற்கொள்வீர். குடும்பத்தினர் ஒத்துழைப்பு உண்டாகும். 

கும்பம்

அவிட்டம் 3,4 : அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். அரசாங்க முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. சதயம் : வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். நண்பர்களுடன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். பூரட்டாதி 1,2,3 : பூமி வகையில் ஆதாயம் காண்பீர். தந்தை வழி உறவினரால் உங்கள் செயல் வெற்றியாகும்.

மீனம்

பூரட்டாதி 4 : நேற்றுவரை உங்கள் செயல்களில் இருந்து வந்த நெருக்கடி விலகும். மனதில் நிம்மதி உண்டாகும். உத்திரட்டாதி : மனதில் இருந்த பயம் போகும். பணியிடத்தில் உண்டான சங்கடம் விலகும். உங்களுக்கு மதிப்புண்டாகும். ரேவதி : மனதில் தேவையற்ற பயம் ஏற்படும். திட்டமிட்டிருந்த ஒரு வேலையை முடிக்க முடியாமல் போகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!