பிறந்து 8 நாட்களே ஆன நிலையில் குழந்தை உயிரிழப்பு! யாழில் சம்பவம்

#SriLanka #Jaffna #Death
Mayoorikka
2 years ago
பிறந்து 8 நாட்களே ஆன நிலையில் குழந்தை உயிரிழப்பு! யாழில் சம்பவம்

யாழில் பிறந்து 8 நாட்களே ஆன நிலையில் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

யாழ்ப்பாணம் நயினாதீவிலுள்ள முதலாம் வட்டாரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 பிறந்து 3 நாட்கள் ஆனநிலையில் அக்குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து கடந்த 19 ஆம் திகதி நயினாதீவு வைத்தியசாலையில் அக்குழந்தை அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அன்றைய தினமே யாழ்.போதனா வைத்தியலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதனையடுத்து அக்குழந்தை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4