மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு என 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ பொருட்கள் கையளிப்பு

#SriLanka #Colombo #Hospital #Lanka4
Kanimoli
2 years ago
மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு என 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ பொருட்கள் கையளிப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய சாலை அபிவிருத்திச்சபை என குறிப்பிடப்படும் தொண்டு அமைப்பின் அனுசரணையில் இன்றைய தினம் புதன்கிழமை (23) மதியம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணப்பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

 குறித்த அமைப்பின் தலைவர் சுபேதி தேரர் அவர்களினால் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரண பொருட்கள் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை யின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கு வழங்கும் வகையில் இன்றைய தினம் புதன்கிழமை (23) மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி பங்களிப்பு மற்றும் அனுசரணையை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் இலங்கையை சேராதவர்கள் வழங்கி உள்ளனர்.

 குறித்த மருத்துவ உபகரணங்கள் நேரடியாக வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு தருவிக்கப்பட்டுள்ளன. -இந்த நிலையில் குறித்த மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணப்பொருட்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அபிவிருத்திச்சபை என குறிப்பிடப்படும் தொண்டு அமைப்பின் அனுசரணையில் குறித்த அமைப்பின் தலைவர் சுபேதி தேரர் அவர்களினால் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் ஊடாக உரிய வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4