நிலவில் வெற்றிகரமாக சந்திரயானை தரையிறக்கி தமிழினத்திற்கு பெருமை சேர்த்த வீரமுத்துவேல்
நிலவின் தென் துருவத்தில் உலகின் முதல் நாடாக இந்தியா அதன் சந்திரயான் - 3 விண்கலத்தை தரையிறக்கியுள்ள நிலையில்,இந்த திட்டத்தின் இயக்குநராக பணியாற்றிய விஞ்ஞானி வீரமுத்துவேலை இஸ்ரோ தலைவர் பாராட்டியுள்ளார்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் நோக்கில் கடந்த மாதம் 14 ஆம் திகதி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து சந்திரயான் - 3 விண்கலம் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில், திட்டமிட்டப்படி இன்று மாலை 06.04 மணிக்கு சந்திரயான - 3 லேண்டர் நிலவில பாதுகாப்பாக தரையிங்கியது. லேண்டர், நிலவில் தரை இறங்கியதும், அதனுள் இருக்கும் பிரக்யான் என பெயரிடப்பட்டுள்ள, 'ரோவர்' வாகனம் வெளியே வந்து, நிலவின் மேற்பரப்பில் ஆய்வை மேற்கொள்ளும். லேண்டர் சாதனம் மற்றும் ரோவர் வாகனம், நிலவில் மேற்பரப்பில், ஒரு நிலவு நாள், அதாவது, பூமியின், 14 நாட்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொள்ளும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்த வெற்றியை இந்தியா கொண்டாடி வருகின்றது. இந்நிலையில், சந்திரயான் - 3 திட்டத்தின் இயக்குநராக பணியாற்றிய வீரமுத்துவேல் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகம் - விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பாடசாலையிலேயே ஆரம்ப கல்வியை கற்றுள்ளார்.
அவரின் தந்தை ரயில்வேயில் பொறியிலாளராக பணியாற்றினார். பாடசாலை கல்வியை தொடர்ந்து சென்னை சாய்ராம் கல்லூரியில் பொறியில் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் தனது கடின ஊழைப்பால் இஸ்ரோவில் வேலைசெய்யும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
மிகப் பெரிய ஊதியத்திற்கு வெளிநாடுகளில் வேலை கிடைத்த போதிலும், அவர் இஸ்ரோவில் பணியாற்றுவதில் உறுதியாக இருந்தார். அங்கும் சிறப்பாக செயற்பட்ட அவர் பல்வேறு படிநிலைகளை தாண்டி சந்திரயான் - 3 இன் இயக்குநராக தெரிவுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், திட்டமிட்டப்படி நிலவின் தென் துருவத்தில் அவர் தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாக சந்திரயான் - 3 விண்கலத்தை தரையிறக்கியுள்ளனர். இது குறித்து பேசிய விஞ்ஞானி வீரமுத்துவேல், "இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த பயணமும் திட்டமிட்ட நேரப்படி கச்சிதமாக நடந்து வெற்றி பெற்றிருப்பது பெருமிதமாக உள்ளது.
" சந்திரயான் - 3 திட்டத்திற்கு கடுமையா உழைத்த அனைவருக்கும் நன்றி. நிலவின் தென் துருவத்திற்கு லேண்டரை கொண்டுச் சென்று தரையிறக்கிய முதல் நாடு என்ற பெறுமையை இந்தியா பெற்றுள்ளது.அத்துடன், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிக்கி நான்காவது நாடு என்ற பெறுமையையும் இந்திய பெற்றுள்ளது." என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.