தனுசு ராசியினருக்கு பணத்தில் விழிப்புணர்வு தேவை - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
தனுசு ராசியினருக்கு பணத்தில் விழிப்புணர்வு தேவை - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : உங்கள் முயற்சியில் இன்று சில சங்கடங்களை சந்திப்பீர்கள். செயல்களில் கூடுதல் கவனம் தேவை. பரணி : பணிபுரியும் இடத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாக்கு வாதங்களைத் தவிர்ப்பீர். கார்த்திகை 1 : எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும். சட்ட ரீதியான சங்கடத்தையும் ஒரு சிலர் அடைவீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : வேலை வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வரும். உற்சாகமான நாள். ரோகிணி : நீங்கள் விரும்பியதை அடைவீர். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மிருகசீரிடம் 1,2 : உறவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். எதிர்பார்த்த வருவாய் வரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். உற்சாகமுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். திருவாதிரை : எதிரிகளால் உண்டான பிரச்னைகளுக்கு சட்ட ரீதியாக முடிவு எடுப்பீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3 : எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். முயற்சியில் இருந்த தடை விலகும்.

கடகம்

புனர்பூசம் 4 : பிள்ளைகள் குறித்த கவலை வந்து செல்லும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வீர். பூசம் : பெரியவர் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை உயரும். ஆயில்யம் : வசித்து வரும் இடத்தை மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர். நட்புகளால் ஆதாயம் காண்பீர்கள். 

சிம்மம்

மகம் : எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு ஒரு முயற்சியில் லாபம் காண்பீர். பூரம் : உங்கள் செயல்களை மற்றவர்கள் பாராட்டுவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உத்திரம் 1 : வியாபாரம் சம்பந்தமாக நீங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். 

கன்னி

உத்திரம் 2,3,4 : நீண்ட நாள் முயற்சி ஒன்றில் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தை விரிவு செய்வீர். அஸ்தம் : பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். அதிகாரிகள் உங்களைப் பாராட்டுவர். சித்திரை 1,2 : வரவேண்டிய பணம் வரும். சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். 

துலாம்

சித்திரை 3,4 : முயற்சிகளுக்கு தடையாக இருந்தவர் விலகுவர். வருமானம் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். சுவாதி : எதிர்பார்த்த வரவு வரும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு அனுகூல தகவல் வரும். விசாகம் 1,2,3 : கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். குடும்பத்தினர் உதவியுடன் தொழிலை விரிவு செய்வீர்.

விருச்சிகம்

விசாகம் 4 : உங்கள் முயற்சியால் விருப்பம் நிறைவேறும். அலைச்சல் உண்டானாலும் செயலில் லாபம் காண்பீர். அனுஷம் : மனதில் குழப்பம் தோன்றும். தொழில் குறித்த ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். கேட்டை : தேவையற்ற நெருக்கடிகளுக்கு ஆளாவீர். பொன் பொருள்களைக் கையாளுவதில் கவனம் தேவை. 

தனுசு

மூலம் : வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். பூராடம் : உடன் பணி புரிவோர் உங்கள் எண்ணத்திற்கு எதிராக செயல்படுவர். புதிய பிரச்னை உண்டாக வாய்ப்புண்டு. உத்திராடம் 1 : குடும்ப உறவுகளால் திடீர் செலவு ஏற்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர். பணத்தில் விழிப்புணர்வு தேவை. 

மகரம்

உத்திராடம் 2,3,4 : நீங்கள் திட்டமிட்ட செயல் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த வருவாய் இன்று வரும். திருவோணம் : நண்பர்கள் உதவியுடன் விருப்பம் நிறைவேறும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். அவிட்டம் 1,2 : தொழிலில் இருந்து வந்த தடை விலகும். உங்கள் நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். 

கும்பம்

அவிட்டம் 3,4 : நேற்று நினைத்த செயல் இன்று நிறைவேறும். புதிய முயற்சி தள்ளிப்போகும்.மனஅமைதி தேவை. சதயம் : எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் முயற்சி ஒன்றில் முன்னேற்றம் காண்பீர்கள் பூரட்டாதி 1,2,3: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். தொழிலில் ஏற்பட்ட மந்த நிலையை சரி செய்வீர்கள். 

மீனம்

பூரட்டாதி 4 : வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி உங்களைத் தேடிவரும். உத்திரட்டாதி : நேற்று மேற்கொண்ட ஒரு முயற்சி இன்று ஆதாயமாகும். பண வரவில் இருந்து வந்த தடை விலகும். ரேவதி : எதிர்பாராத வரவு உண்டாகும். தந்தை வழி உறவுகளால் உங்கள் செயல்களில் வெற்றி உண்டாகும்.