வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம்!

#SriLanka #Bank #Lanka4
Thamilini
2 years ago
வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது வழமையான வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் வைத்திருக்க தீர்மானித்துள்ளது. 

அதன்படி, வழக்கமான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் வழக்கமான கடன் வசதி விகிதம் (SLFR) முறையே 11.00 சதவீதம் மற்றும் 12.00 சதவீதமாக இருக்கும்.  

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை அடமான வசதிகளுக்காக வருடாந்த அதிகபட்ச வட்டி வீத வரம்பான 18% ஐ விதிக்கவும் தீர்மானித்துள்ளது. 

தற்காலிக ஓவர் டிராஃப்ட்களுக்கு ஆண்டுக்கு 23 சதவீத வட்டி வரம்பு விதிக்கவும், கிரெடிட் கார்டு வசதிகளுக்கு ஆண்டுக்கு 28 சதவீத வட்டி வரம்பு விதிக்கவும் முடிவு செய்தனர். 

உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4