ரஜினியின் 170-வது படம் பெயர் 'வேட்டையன்'!

#India #Cinema #Actor #TamilCinema #Director #Budget 2022 #2023 #rajini kanth
Mani
2 years ago
ரஜினியின் 170-வது படம் பெயர் 'வேட்டையன்'!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி வசூலில் சாதனை படைத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஜினி தனது 170 வது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளி வந்த நிலையில் அந்த படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய டி ஜே ஞான வேல் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது ரஜினியின் 170 வது படத்திற்கு வேட்டையன் என பெயர் வைக்க பரிசீலிப்பதாக இணைய தளங்களில் தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. சந்திரமுகியில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்த ரஜினிகாந்த் அந்த பெயருக்கு பொருத்தமாக நடித்திருப்பார். எனவே அந்த பெயர் சூட்டப்படலாம் என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகார்வ பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4