சமூக வலைதளங்களில் போலி வீடியோவை வெளியிட்ட சந்தேகத்தின் பேரில் மாணவன் ஒருவர் கைது

#SriLanka #Arrest #Student
Prathees
2 years ago
சமூக வலைதளங்களில் போலி வீடியோவை வெளியிட்ட சந்தேகத்தின் பேரில் மாணவன் ஒருவர் கைது

பிரபல குழந்தை நடிகை ஒருவரின் அரைநிர்வாண வீடியோ காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பிய 15 வயது பள்ளி மாணவன் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சந்தேகநபரான மாணவன் இன்று (24) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 பிரபல குழந்தை நடிகை ஒருவரின் அரை நிர்வாண வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதாக சம்பந்தப்பட்ட மாணவியின் தாயார் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் அண்மையில் முறைப்பாடு அளித்திருந்தார்.

 அதன்படி, பெலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் இது தொடர்பான காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக விசாரணைகளை மேற்கொண்ட உரிய பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

 பின்னர் அந்த பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (23) கைது செய்யப்பட்டார். பெலியஅத்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே குறித்த காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

 ஒன்லைன் முறை மூலம் நடத்தப்படும் மேலதிக வகுப்புகளுக்கு தனது தாயின் கைபேசியை எடுத்துச் சென்றதாகவும், அது தொடர்பான வீடியோ கிளிப்பை அதில் இணைந்த வாட்ஸ்அப் குழுவில் வெளியிட்டதாகவும் சந்தேக நபரான மாணவன் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 மேலும் அந்த போலி வீடியோவை வேறு ஒருவரிடமிருந்து பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார் அந்த நபர் யார் என்பது பற்றி மாணவனட விசாரணை அதிகாரிகளிடம் கூறவில்லை என கூறப்படுகிறது.

 இதன்படி, சந்தேக நபரான பாடசாலை மாணவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4