நிலவில் ஆராய்ச்சியை தொடங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர்

#India #Research #Space
Prasu
1 year ago
நிலவில் ஆராய்ச்சியை தொடங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர்

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது.

 அதன்பின் ஆறு மணி நேரம் கழித்து பிரக்யான் ரோவர் மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து நிலவில் கால்பதித்தது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது.

இந்நிலையில், சந்திரயான் 3 லேண்டர் சிறப்பாக செயல்படுகிறது என்றும் நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் நகர்ந்து அதன் ஆராய்ச்சியைத் தொடங்கியது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் செயல்படுவதால், தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.