ரிஷப ராசியினருக்கு வாழ்க்கைத் துணையின் உதவியால் விருப்பம் நிறைவேறும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
ரிஷப ராசியினருக்கு வாழ்க்கைத் துணையின் உதவியால் விருப்பம் நிறைவேறும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி : நேற்றுவரை இருந்த நெருக்கடி காணாமல் போகும். வருமானத்தில் இருந்து வந்த தடை விலகும். பரணி : குடும்ப நிலையைப் புரிந்து கொண்டு செயல்படுவீர். உங்கள் முயற்சி ஒன்று முன்னேற்றம் அடையும். கார்த்திகை 1 : பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர். உங்களால் லாபம் அடைந்தவர் இன்று உங்களைத் தேடிவருவர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : உங்கள் மனம் விரும்பியபடி செயல்படுவீர். நண்பர்கள் உதவியால் நினைத்தது நடந்தேறும். ரோகிணி : எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். விலகிச் சென்ற உறவினர் மீண்டும் உங்களோடு நட்பு கொள்வர். மிருகசீரிடம் 1,2 : பயணத்தில் அனுகூலம் உண்டு. வாழ்க்கைத் துணையின் உதவியால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : சொத்து விவகாரத்தை பேசி தீர்ப்பீர். நண்பர்கள் உதவியுடன் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றுவீர். திருவாதிரை : ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3 : எதிர்ப்பு விலகும். புதிய நட்பால் உற்சாகம் அடைவீர். ஒரு பிரச்னை முடிவிற்கு வரும்.

கடகம்

புனர்பூசம் 4 : முயற்சி ஒன்றில் போராடி வெற்றி பெறுவீர். பெரியவர்களின் ஆதரவும் ஆசியும் அதிகரிக்கும். பூசம் : பழைய பிரச்னை ஒன்றில் முடிவு காண்பீர். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். ஆதாயம் அதிகரிக்கும். ஆயில்யம் : செயல்களில் வெற்றி காண்பீர். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு வரும்.

சிம்மம்

மகம் : திட்டமிட்டு செயல்படுவீர். அதிகமாக உழைத்து குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர். பூரம் : உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்வீர். அதிரடியாக ஒரு முயற்சியை மேற்கொள்வீர். உத்திரம் 1 : வேலை பளு அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர். நண்பர்கள் உதவி செய்வார்.

கன்னி

உத்திரம் 2,3,4 : தடைகளை மீறி முயற்சியில் வெற்றி காண்பீர். சகோதரர் வழியில் அனுகூலம் உண்டு. அஸ்தம் : நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். கடன்களை அடைப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். சித்திரை 1,2: வியாபாரத்தில் உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். வர வேண்டிய பணம் வரும் நாள்.

துலாம்

சித்திரை 3,4 : உங்கள் முயற்சியில் இருந்து வந்த தடை விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு லாபமடைவீர். சுவாதி : வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை நண்பர்கள் ஆதரவுடன் சரி செய்வீர். வருமானம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3 : எதிர்பாராத வருவாயை அடைவீர். நண்பர்கள் துணையுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்.

விருச்சிகம்

விசாகம் 4 : எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி வரும். பயணத்தினால் அலைச்சல் அதிகரிக்கும். அனுஷம் : அனைவரையும் அனுசரித்துச் செல்வீர். இழுபறியான செயல் ஒன்று இனிதே நிறைவேறும். கேட்டை : பொதுவிஷயத்தில் ஈடுபட்டு மதிப்பினை உயர்த்துவீர். பிறருடன் வாக்குவாதம் வேண்டாம்.

தனுசு

மூலம் : மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும். செலவு அதிகரிக்கும். பூராடம் : எதிர்ப்புகளால் மனதில் குழப்பம் தோன்றும். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. உத்திராடம் 1 : குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். செலவு செய்து பிள்ளைகள் விருப்பத்தை நிறைவேற்றுவீர். 

மகரம்

உத்திராடம் 2,3,4 : மறைமுக எதிர்ப்பு தோன்றினாலும் அவற்றை சமாளிப்பீர். வருமானம் அதிகரிக்கும். திருவோணம் : தம்பதி ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்வதால் குடும்பத்தில் நன்மை உண்டாகும். அவிட்டம் 1,2 : நீங்கள் எதிர்பார்த்ததை விட இன்று கூடுதல் வருமானம் உண்டு. உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். 

கும்பம்

அவிட்டம் 3,4 : வியாபாரத்தில் ஆதாய நிலை ஏற்படும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர். சதயம் : உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானத்திற்காக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். லாபம் அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3 : உங்கள் செயலில் வேகம் உண்டாகும். எதிர்பார்த்த ஒன்றில் லாபம் காண்பீர். நிதிநிலை உயரும். 

மீனம்

பூரட்டாதி 4 : பண வரவில் இருந்து வந்த தடை விலகும். உறவினர் ஆதரவுடன் முயற்சியில் லாபம் காண்பீர். உத்திரட்டாதி : நேற்று எதிர்பார்த்த தகவல் வரும். புதிய நம்பிக்கை உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். ரேவதி : அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும்.