மன்னார் மட்டுப்படுத்தப்பட்ட பெரியகடை மீனவ கூட்டுறவு சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறை விழா

#SriLanka #Mannar #Lanka4
Kanimoli
2 years ago
மன்னார் மட்டுப்படுத்தப்பட்ட பெரியகடை மீனவ கூட்டுறவு சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறை விழா

மன்னார் மட்டுப்படுத்தப்பட்ட பெரியகடை மீனவ கூட்டுறவு சங்கத்தின் 30 ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை (24)காலை 11 மணியளவில் மன்னார் பெரிய கடையில் அமைந்துள்ள மீனவ கூட்டுறவு சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது.

 பெரிய கடை மீனவ கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கே.கிறிஸ்டின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,மன்னார் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ரி.வித்தக கலாநிதி,உதவி கடற்றொழில் பணிப்பாளர் வி.கலிஸ்டன்,மாவட்ட கடற்தொழில் உத்தியோகத்தர் எஸ்.பவாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 இதன் போது மட்டுப்படுத்தப்பட்ட பெரியகடை மீனவ கூட்டுறவு சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் போது தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு,விருந்தினர்களும் கௌரவிக்கப்பட்ட அமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4