வைத்தியர் ஜி.விஜேசூரியவை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகமாக ஏற்றுக் கொள்வதில்லை

#SriLanka #doctor #Lanka4
Kanimoli
2 years ago
வைத்தியர் ஜி.விஜேசூரியவை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகமாக ஏற்றுக் கொள்வதில்லை

எதிர்காலத்தில், வைத்தியர் ஜி.விஜேசூரியவை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகமாக ஏற்றுக் கொள்வதில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்தினை எதிர்வரும் வாரத்தில் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட உள்ளது.

 அங்கு வைத்தியர் ஜி. விஜேசூரியவுக்கு எதிராக முறைப்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

 இதேவேளை, 07 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்திய நிபுணர்கள் ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (25) காலை 8.00 மணியுடன் நிறைவடைந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4