சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து சட்டத்தரணிகள் போராட்டம்

#SriLanka #Kilinochchi #Lanka4
Kanimoli
2 years ago
சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து சட்டத்தரணிகள் போராட்டம்

கிளிநொச்சியில் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து கிளிநொச்சி நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள கண்டனப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

 குறித்த போராட்டமானது இன்று (25.08.2023) காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் நாடாளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்து இந்த எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4