எமது கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே உள்ளது! சாணக்கியன் ஆவேசம்

#SriLanka #sanakkiyan
Mayoorikka
2 years ago
எமது கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே உள்ளது! சாணக்கியன் ஆவேசம்

ஜனாதிபதியிடம் நாம் கோரும் மக்களுக்கான கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே உள்ளது. என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 இவ்வாரம் நடந்த பாராளுமன்ற கேள்வி பதிலின் போது சாணக்கியனால் இரண்டு கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

 அதில் பல காலமாக கோரிக்கை வைத்த இரண்டாவது கேள்விக்கான தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளது எனவும் முதல் கேள்வி பிரதமரிடம் மாவட்ட அபிவிருத்திக்குழுக்களில் எமக்கும் நடக்கும் அநியாயங்கள் மற்றும் அட்டூழியங்கள் தொடர்பில் கோரிக்கை விடுத்தும் அவரால் இன்னும் இவற்றுக்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதனை சுட்டிக் காட்டியதோடு. இதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

 இரண்டாவது விடயம் பந்துல குணவர்த்தன வர்த்தக அமைச்சருக்கானது மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவில் களுதாவளை பிரதேசத்தில் கடந்த நல்லாட்சியின் போது வர்த்தக மையம் ஒன்று அமைக்கப்படாது இதுவரை காலமும் இவ்வர்த்தக மையத்திற்காக எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படாமல் இருந்தது ஆனால் அதனை செயல்படுத்துவதர்க்கான உறுதியை வழங்கி இருந்தார். என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4