கஜேந்திரகுமார் வீட்டிற்கு முன்பு ஆர்ப்பாட்டம்: குவிக்கப்பட்டுள்ள அதிரடிப் படையினர்

#SriLanka #Protest #Gajendrakumar Ponnambalam
Mayoorikka
2 years ago
கஜேந்திரகுமார் வீட்டிற்கு முன்பு ஆர்ப்பாட்டம்: குவிக்கப்பட்டுள்ள அதிரடிப் படையினர்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் தேரர் உள்ளிட்ட இருவர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

 இதன்காரணமாக பெருமளவு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

 இந்த நிலையில் அப்பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும்  என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம். 

 இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும், இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4