வரலாற்றுச் சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் மின்வெட்டு – 200 பிக்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல்!

#SriLanka #power cuts #Monk
Prathees
2 years ago
வரலாற்றுச் சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் மின்வெட்டு – 200 பிக்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல்!

சுமார் இருநூறு பிக்குகள் வாழும் வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

 1954ஆம் ஆண்டு முதல் திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டதன் பின்னணியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 மின்சாரம் துண்டிக்கப்பட்ட போதும் இந்த ஆரண்ய சேனாசனத்தில் புதிய பிக்குகள் மற்றும் நோயுற்ற பிக்குகள் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 மின்வெட்டு காரணமாக அங்கு வசிக்கும் பிக்குகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏறக்குறைய 57 இலட்சம் ரூபாவான இந்த மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கு திம்புலாகல ஆரண்ய சேனாசனத்திற்கு போதிய ஆதரவோ, பணமோ கிடைக்காது என திம்புலாகல புத்த ஸ்ராவக சங்க சபையின் பதிவாளர் வணக்கத்திற்குரிய திம்புலாகல ராகுலலங்கார தேரர் தெரிவித்துள்ளார். 

 மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் திம்புலாகல ஆரண்ய சேனாசனத்திற்கு மாதாந்தம் சுமார் ஒரு இலட்சம் மின்சாரக் கட்டணம் இருந்த போதிலும், மின் கட்டண உயர்வால் 2000 ரூபா மின்சாரக் கட்டணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4