மகர ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
மகர ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : இரண்டு நாட்களாக இருந்த சங்கடம் விலகும். தடைபட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர். பரணி : எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். தந்தை வழி உறவுகளால் நன்மை அதிகரிக்கும். கார்த்திகை 1 : வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் இன்று வசூலாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : உங்கள் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. எதிர்ப்புகளால் ஒரு செயல் தள்ளிப்போகும். ரோகிணி : சந்திராஷ்டமம் என்பதால் பணிகளில் விழிப்புணர்வு அவசியம். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மிருகசீரிடம் 1,2 : வீண் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும். தொழிலில் சில தடைகளை சந்திப்பீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : உங்கள் எதிர்பார்ப்பும், மனதிற்கினிய சம்பவமும் நடைபெறும். எதிர்தரப்பினர் உங்களிடம் அஞ்சுவார். திருவாதிரை : உறவினர் ஆதரவால் நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். எதிர்பாலினரால் ஆதாயம் காண்பீர். புனர்பூசம் 1,2,3 : நீங்கள் விரும்பியதை இன்று அடைவீர். பிரச்னை விலகும். வருமானம் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4 : மறைமுக சூழ்ச்சிகளை முறியடிப்பீர். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். பூசம் : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும். ஆயில்யம் : உங்களுடைய துணிச்சல் அதிகரிக்கும். நண்பர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி சாதகமாகும்.

சிம்மம்

மகம் : பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கலை பெரியோரின் ஆதரவுடன் பேசி தீர்ப்பீர். கோயிலுக்கு செல்வீர். பூரம் : உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்பு விலகும். விலகிச் சென்றவர் மீண்டும் வருவர். வருமானம் அதிகரிக்கும். உத்திரம் 1 : பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும் . திடீர் பண வரவால் மகிழ்வீர்.

கன்னி

உத்திரம் 2,3,4 : உறவினர் ஆதரவால் முயற்சியில் ஆதாயம் காண்பீர். வெளியூர் பயணத்தால் சிறு சங்கடம் தோன்றும். அஸ்தம் : குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சித்திரை 1,2: சனி பகவான் அருளால் உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4 : வேலைக்கு முயற்சித்தவருக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளியில் செல்வாக்கு அதிகரிக்கும். சுவாதி : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பார். விசாகம் 1,2,3 : துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4 : மனதில் இருந்த குழப்பம் விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். அனுஷம் : பெரியோரின் ஆலோசனை நன்மையாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். பிரச்னை விலகும். கேட்டை : பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு அதிகரிக்கும். மற்றவரால் மதிக்கப்படுவீர்.

தனுசு

மூலம் : மற்றவர் செய்யும் விமர்சனங்களை பொறுப்படுத்த வேண்டாம்.அமைதி தேவையான நாள். பூராடம் : மற்றவர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார். மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். உத்திராடம் 1 : உங்கள் எண்ணப்படி செயல்படுவீர். நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : வரவை விட செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் கவனம் தேவை. திருவோணம் : மற்றவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அவிட்டம் 1,2 : பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.

கும்பம்

அவிட்டம் 3,4 : உங்கள் முயற்சி வெற்றியாகும். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். சதயம் : வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும். பூரட்டாதி 1,2,3 : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். மூத்த சகோதரர் உங்கள் செயலுக்கு உதவுவார்.

மீனம்

பூரட்டாதி 4 : வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சி மேற்கொள்வீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உத்திரட்டாதி : நேற்று நிறைவேறாமல் இருந்த உங்கள் முயற்சி நிறைவேறும். இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். ரேவதி : பணி புரியும் இடத்தில் இருந்த பிரச்னை விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும்.