சட்டவிரோதமான பிரமிட் திட்டங்கள் தொடர்பில் மத்திய வங்கி நடவடிக்கை!

#SriLanka #Bank #Central Bank
Mayoorikka
2 years ago
சட்டவிரோதமான பிரமிட் திட்டங்கள் தொடர்பில் மத்திய வங்கி நடவடிக்கை!

சட்டவிரோதமான பிரமிட் திட்டங்கள் தொடர்பில், பொதுமக்களிடமிருந்து 4 வகையான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

 குறித்த திட்டங்களை சட்டபூர்வமான திட்டங்கள் என நியாயப்படுத்தும் முயற்சிகளில் பல நிறுவனங்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன்படி, நிறுவனங்கள், இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் குறித்த நிறுவனங்களின் திட்டங்கள் முதலீட்டாளர்களின் நிதியங்களைப் பாதுகாக்கின்றது.

 அந்த திட்டங்களுடன் தொடர்புடைய வரிகளை, குறித்த நிறுவனம் அரசாங்கத்திற்குச் செலுத்துகிறது. நிதியங்களை மீளப்பெறும் நோக்கில், அந்த திட்டத்தில், பங்கேற்பவர்கள் தமது நிதியங்களிலிருந்து தனிப்பட்ட வருமான வரியை இலங்கை மத்திய வங்கிக்கு செலுத்த வேண்டும், இல்லையேல் அந்த நிதி நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களின் நிதியங்கள் இலங்கை மத்திய வங்கியினால் முடக்கப்படும்.

 குறித்த திட்டம், இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது என்ற 4 வகையான கருத்துக்களை குறிப்பிட்டு, அந்த நிறுவனங்கள் சட்டவிரோதமான பிரமிட் திட்டங்களில் பொதுமக்களை ஈடுபட வைப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 இந்தநிலையில், குறித்த 4 கருத்துக்களை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவற்றில் உண்மைத்தன்மை இல்லை எனவும் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கியினால் உரிமமளிக்கப்பட்டு நிதி செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிறுவனங்களின் அட்டவணையும் வெளியிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4