லஞ்சம் பெற்ற தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் இருவருக்கு நேர்ந்தக் கதி!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
லஞ்சம் பெற்ற தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் இருவருக்கு நேர்ந்தக் கதி!

25,000 ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி ஒருவருக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

எனினும் இந்த தண்டனையை 5 வருடங்களில் அனுபவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.  

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 5,000 ரூபா அபராதம் விதித்த உயர்நீதிமன்ற நீதிபதி, லஞ்சமாக பெற்ற 25,000 ரூபாவை தண்டப்பணமாக வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளார். 

பேருவளை உள்ளுராட்சி சபையின் பயாகல அலுவலகத்தில் சுற்றாடல் அறிக்கை ஒன்றை வழங்குவதற்காக நபரொருவரிடம் 25,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இதேவேளை, மத்துகம பிரதேச பொறியியல் அலுவலகத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவர் ஐயாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

பேருவளை பிரதேசத்தில் ஒப்பந்ததாரர் ஒருவரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4