முட்டை இறக்குமதி தொடரும்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
முட்டை இறக்குமதி தொடரும்!

முட்டை இறக்குமதி தொடரும் என்று மாநில வணிக இதர சட்டப்பூர்வ நிறுவனத்தின் தலைவரான ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார். 

முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டைப் போக்க முடிந்தது எனவும், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைக் கொள்கையின் அடிப்படையில், இறக்குமதி நடவடிக்கை தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார். 

இதன்படி நாளாந்தத் தேவையான ஒரு மில்லியன் முட்டைகளுக்கு தேவையைான முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4