நீதிமன்ற வழக்குக் களஞ்சியசாலையில் 3 கோடி பெறுமதியான ஹெரோயினைத் திருடிய முன்னாள் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது

#SriLanka #Arrest #Police
Prathees
2 years ago
நீதிமன்ற வழக்குக் களஞ்சியசாலையில் 3 கோடி பெறுமதியான ஹெரோயினைத்  திருடிய முன்னாள் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது

பாணந்துறை நீதிமன்ற வழக்குக் களஞ்சியசாலையில் இருந்து திருடப்பட்ட 3 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஹெரோயின் கையிருப்பை விற்பனை செய்யத் தயாரான பணி இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் விற்பனை முகவர் ஆகியோர் கம்பளை விசேட பொலிஸ் குழுவினரால் நேற்று (25) காலை மாத்தளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மீரிகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போது பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் அலமாரியை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 18 ஆம் திகதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

 மாத்தளையை வசிப்பிடமாகக் கொண்ட பணி இடைநிறுத்தப்பட்ட கான்ஸ்டபிள், தனது நெருங்கிய நண்பரான விற்பனைப் பிரதிநிதியுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 இந்த விற்பனை பிரதிநிதி பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதையே தொழிலாக கொண்டவர்.

 இதேவேளை, கடந்த 4ஆம் திகதி பாணந்துறை நீதிமன்றின் வழக்கு களஞ்சியசாலை உடைக்கப்பட்டு 3 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

 கம்பளை பொலிஸாரின் விசேட குழுவொன்று மாத்தளையில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்து சோதனையிட்டதுடன், சந்தேகத்திற்குரிய இடைநிறுத்தப்பட்ட கான்ஸ்டபிளுடன் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளனர்.

 சந்தேகநபரின் நெருங்கிய நண்பரான விற்பனைப் பிரதிநிதியையும் கைது செய்த பொலிஸார், அவர்களிடம் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் போது ஹெரோயின் கடத்தல் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

 பாணந்துறை நீதிமன்றத்தின் கூரையில் இருந்து இறங்கி வழக்குப் பொருட்களின் களஞ்சியசாலையை உடைத்து 3 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஹெரோயின் கையிருப்பை திருடியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.லலித் பதிநாயக்கவின் மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4