மதுரை சுற்றுலா ரயில் விபத்தில் 10 பேர் பலி என தகவல்

#India #Death #Tourist #Accident #Train #Breakingnews
Mani
1 year ago
மதுரை சுற்றுலா ரயில் விபத்தில் 10 பேர் பலி என தகவல்

மதுரையில் இன்று அதிகாலையில் சுற்றுலா ரயிலில் தீப்பிடித்ததில்10 பேர் உயிரிழந்தனர், ஆறு பேர் காயமடைந்தனர்.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபத்து குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், ரயிலில் இருந்த பயணிகள், சட்ட விரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டரை எடுத்துச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 3 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள் மற்றும் ஒருவரின் அடையாளம் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது? ஆகஸ்ட் 17 ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 60 பேர் கொண்ட குழு ஆன்மீகப் பயணமாக தமிழகம் வந்தனர். இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனிதத்தலங்களுக்கும் சென்றுள்ளனர்.

கடைசியாக நேற்று நாகர்கோவிலில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை 3.45 மணியளவில் மதுரை வந்துள்ளனர். புணலூரில் இருந்துவந்த ரயில் மூலம் அவர்கள் மதுரை வந்தனர். அவர்கள் வந்த இரண்டு ரயில் பெட்டிகள் தனியாகப் பிரிக்கப்பட்ட மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கனெக்டிங் ரயில் மூலமாக நாளை சென்னை செல்லவிருந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 5.15 மணியளவில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. ரயிலுக்குள் இருந்த பயணிகள் சிலிண்டர் பயன்படுத்தி சமைத்துள்ளனர். அப்போது சிலிண்டர் வெடித்து தீ பிடித்துள்ளது. தீ மளமளவென பரவியதால், ரயிலில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

55 பேர் உயிர் தப்பினர். சமைப்பதற்காக ரயில் பெட்டியின் ஒருபுறம் உள்ள கதவில் உள்புறம் தாழிடப்பட்டிருந்த நிலையில் பயணிகள் அனைவரும் ஒரே பக்கத்தில் அனைவரும் ஒரே பக்கத்தில் இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், தீயில் சிக்கி10 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.