சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என பெயர் சூட்டிய பிரதமர் மோடி
நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 வெற்றிக்கு பாடுப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை இந்திய பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டினார்.
அப்போது பிரதமர் மோடியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் மோடி பேசுகையில், ”தென் ஆப்ரிக்கா சென்றிருந்தாலும் எனது மனம் முழுவுதும் இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே இருந்தது.
இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவை தொட்ட தருணம் மறக்க முடியாது நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை சிவசக்தி என்று அழைப்போம்.
இமயம் முதல் குமரி வரை இந்தியாவை இணைக்கும் தாரக மந்திரமாக சிவசக்தி உள்ளது. பூமி என்பது பெண் சக்தியின் அடையாளமாக திகழ்கிறது.
சந்திரயான் -3 திட்டத்தில் பெண்கள் பங்களிப்பு அதிகம் உள்ளதால், சிவசக்தி என்று அழைப்பதே சால சிறந்ததாகும்” என கூறினார்.