கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
#India
#Tamilnews
#Breakingnews
#River
Mani
1 year ago
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது. ஆனால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக இரு மாநில அரசுகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,121 கன அடியில் இருந்து 8,038 கன அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 6,038 கனஅடியாக உயர்ந்திருக்கிறது. இருப்பினும், கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படுவது தொடர்ந்து 2,000 கன அடியாக உள்ளது.