அரசியலில் களமிறங்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடகர்

#Cinema #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
அரசியலில் களமிறங்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடகர்

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த பாடலை ஜூனியர் என்.டி.ஆரும் மற்றும் ராம் சரண் போட்டி போட்டு ஆடும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், 'நாட்டு நாட்டு' பாடலுக்கு பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பங்கேற்க விண்ணப்பம் செய்துள்ளதாகவும் கோஷமஹால் தொகுதியில் அவர் களமிறக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4