வியாபார முயற்சிகளில் வெற்றியடையும் நான்கு ராசியினர், அதிலும் மேஷ ராசியினருக்கான - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
வியாபார முயற்சிகளில் வெற்றியடையும் நான்கு ராசியினர், அதிலும் மேஷ ராசியினருக்கான - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்கள்.நம்பிக்கை அதிகரிக்கும். பரணி : தொழிலில் ஏற்பட்ட தடையை சரிசெய்வீர். எதிர்பார்த்த பணம் வரும். பெரியோர் அறிவுரை நன்மை தரும். கார்த்திகை 1 : வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : நேற்று நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும் நாள். ரோகிணி : குடும்பத்தில் உண்டான பிரச்னைகளை சரி செய்வீர். பூமி விவகாரத்தில் நன்மை உண்டாகும். மிருகசீரிடம் 1,2 : அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளில் இழுபறி உண்டாகும். எதிர்ப்பு தோன்றும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நினைத்ததை சாதித்து முடிப்பீர். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். செயலில் இருந்த தடை விலகும். திருவாதிரை : எதிர்பார்த்த வருவாய் வரும். எதிரிகளால் உண்டான சங்கடம் விலகும். மகிழ்ச்சியான நாள். புனர்பூசம் 1,2,3 : நண்பர்கள் உதவியால் உங்கள் செயல்களில் இருந்த சங்கடம் நீங்கும். கோயிலுக்கு செல்வீர்.

கடகம்

புனர்பூசம் 4 : தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்வார். பூசம் : நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சி வெற்றி பெறும். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும். ஆயில்யம் : எதிர்பாராத ஆதாயம் வரும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்

மகம் : வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பகைவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். பூரம் : எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும் என்றாலும் பொறுமை அவசியம். உத்திரம் 1 : புதிய முயற்சி நிறைவேறும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். நிதிநிலை உயரும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : அலைச்சல் அதிகரித்தாலும் நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அஸ்தம் : வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் லாபம் உண்டாகும். கடன்களை அடைப்பீர்கள். சித்திரை 1,2: தாய்வழி உறவினர்கள் ஆதரவுடன் குடும்பத்தில் நன்மை ஏற்படும். நீண்டநாள் விருப்பம் நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4 : தொழிலில் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். சகோதரர் உதவி நன்மையில் முடியும். சுவாதி : நெருக்கடிகளில் இருந்து மீளுவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். எதிர்பார்த்த தகவல் வரும். விசாகம் 1,2,3: வழக்கமான செயலிலும் கூட முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலர் குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்.

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். அனுஷம் : சொத்து வழியிலான சங்கடம் விலகும். நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர். கேட்டை : சொத்து சேர்க்கையில் கவனம் செல்லும். உங்கள் செல்வாக்கு உயரும். வருமானத்தில் இருந்த தடை விலகும்.

தனுசு

மூலம் : இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் அடைவீர். பூராடம் : மனதில் இருந்த சங்கடம் நீங்கும். குடும்பத்தில் உங்கள் செயலை மற்றவர்கள் பாராட்டுவர். உத்திராடம் 1 : எதிர்காலம் குறித்த சிந்தனை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சி மேற்கொள்வீர்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். செயல்களில் கவனம் அவசியம். திருவோணம் : மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். அவிட்டம் 1,2 : உங்கள் முயற்சிகளில் நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மனஸ்தாபம் ஏற்படும்.

கும்பம்

அவிட்டம் 3,4 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபம் தரும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். சதயம் : எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பெரியோரின் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றி பெறும். பூரட்டாதி 1,2,3 : உங்கள் செயலில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும்.

மீனம்

பூரட்டாதி 4 : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகி லாபம் அதிகரிக்கும். மற்றவர் உங்கள் விரும்புவார்கள். உத்திரட்டாதி : குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் நினைத்தவை நடந்தேறும். ரேவதி : தொழிலை விரிவு செய்வதற்கான முயற்சியை மேற்கொள்வீர். செயலில் இருந்த நெருக்கடி நீங்கும்.